பெலரூஸ் – போலந்து எல்லை மோதல் வலுக்கிறது

எல்லை மோதல் வலுக்கிறது

புகலிடத்தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் பெலரூஸ் நாட்டுக்கும் போலந்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தற்போது பூகோள அரசியல் நெருக்கடியாக மாற்றம் பெற்றுள்ளது. எல்லை மோதல் வலுக்கிறது என்று அறிய முடிகிறது.

மாதக்கணக்கில் இடம்பெற்றுவரும் இந்த நெருக்கடி அங்கு ஒரு மனிதப் பேரவலத்தை தோற்றுவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஏறத்தாள 4000 மக்கள் இதுவரை அங்கு வந்து காத்திருக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளது.  இதனால் எல்லையில் தங்கியிருக்கும் மக்கள் கடும் குளிரில் போதுமான வசதிகள் இன்றி துன்பத்தில் வாடுவதாக தெரிவிக்கப்படுகின்து.

இது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உலக அமைப்புக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளன. அங்கு செல்வதற்கு வழக்கறிஞர்கள், உதவிப் பணியார்கள், ஊடகவியலாளர்களுக்கும் அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெலரூஸின் அரச தலைவர் அலக்ஸ்சாட்டர், லுகசென்கோவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடைக்கு எதிராக அவரே இந்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தன்னால் பராமரிக்க முடியாது என பெலாரூஸ் தெரிவித்ததை தொடர்ந்து பெலாரூஸின் எல்லை நாடுகளான லுத்துவேனியா, லற்வியா மற்றும் பொலந்து ஆகிய நாடுகளை நோக்கி அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நெருக்கடிகளுகிடையில் அணுக்குண்டுகளை வீசும் இரண்டு போர் விமானங்ளை ரஸ்யா பெலாரூஸ் இன் வான்பரப்பிற்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் பெலாரூஸ் படையினருடன் இணைந்து படை ஒத்திகைகளையும் ரஸ்யா நடத்தியுள்ளது.

இதனிடையே இந்த நெருக்கடிகளின் பின்னணியில் ரஸ்யாவே உள்ளதாக வார்சோ குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.