இலங்கையில் 60% இற்கும் அதிகமான கட்டுமானங்களுக்கு முறையான அனுமதியில்லை…

இலங்கையில் 60% இற்கும் அதிகமான கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி தன்னிச்சையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேநாதீர  தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிற்குள் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நடைபெற்ற நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த அதன் சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேநாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.