மட்டக்களப்பு-Zoom வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த மாணவி தற்கொலை

136 Views


மட்டக்களப்பு தலைமையக காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Zoom வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதான தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் 8ம்   வகுப்பில் கல்வி பயிலும் 13வயது சிறுமியென  காவல்துறையினர்  தெரிவித்தனர்.

கற்றுக்கொண்டிருந்த மாணவி

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி -Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில், அவரது  மூத்த சகோதரி குளியலறையில் இருந்துள்ளதாகவும், குளியலறையிலிருந்து வந்தபோது   தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் மட்டக்களப்பு   காவல்துறையினர்  தெரிவித்தனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply