இலங்கையில் தமிழ் சினிமா- ஆதரவு தருமாறு மட்டக்களப்பு கலைஞர்கள் கோரிக்கை

364 Views

இலங்கையில் தமிழ் சினிமா

இலங்கையில் தமிழ் சினிமா

இலங்கை தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களும் இங்குள்ளவர்களும் ஊக்கப்படுத்தும்போது மேலும் இலங்கை தமிழ் சினிமா துறை வளர்ச்சியடையும் என மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக குருந்திரைப்படங்கள், முழு நீளத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக இருக்கின்றது. அதே விதத்தில் நாளை வியாழக்கிழடை (24) றிச்சட் என்னும் முழு நீளத் திரைப்படம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளம் கலைஞர்களின் படைப்பாக வெளிவர இருக்கின்றது.

இத் திரைப்படம் தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போது இத்திரைப்படம் தொடர்பில் இயக்குனர் கிருஸ்ணகுமார் பிறேமலக்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் மார்ச் 24ம் திகதி முழு நீள திகிலூட்டும் திரைப்படமொன்று சாந்தி மற்றம் செல்லம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கின்றது. இதற்கு மக்களின் ஆதரவினை நாங்கள் கோரி நிற்கின்றோம்.  சினிமாத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இளைஞர்கள் இன்று முன்வந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் சினிமா வளரவேண்டுமானால் இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கவேண்டும். அதேபோன்று தென்னிந்திய சினிமாவுக்கு புலம்பெயர் தேசத்தில் வழங்கும் முக்கியத்துவம் போன்று வடக்கு கிழக்கிலிருந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு வழங்க வேண்டும். இதன்போது தமிழ் சினிமா வளர்ச்சியடைவதுடன் கலைஞர்களும் வாழும் நிலையேற்படும்” என்றார்.

Tamil News

Leave a Reply