குடியேறிகளை குறிவைத்துள்ள அவுஸ்திரேலிய அரசின் புதிய மசோதா

478 Views

குடியேறிகளை குறிவைத்துள்ள அவுஸ்திரேலிய அரசின் புதிய மசோதா

அவுஸ்திரேலியாவில் வாழப்போகிற புதிய குடியேறிகள், அந்நாட்டு அரசின் நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் புதிய மசோதா, பெண் குடியேறிகள் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து தப்ப எண்ணும் பெண்களுக்கும்  பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது பற்றி அவுஸ்திரேலிய மேலவைக்கு கடிதம் எழுதியுள்ள குடியேறிகள் தொடர்பான சமூக நல அமைப்புகள், Social Services Legislation Amendment (Consistent Waiting Periods for New Migrants) Bill 2021 எனும் மசோதாவை எதிர்க்க கோரியுள்ளனர்.

இந்த மசோதா நிறைவேறினால், புதிதாக அவுஸ்திரேலியாவில் குடியேறக் கூடியவர்கள் அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்படுகிறது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply