அவுஸ்திரேலியாவில் வேலையில்லாமல் நிச்சயத்தன்மையற்ற நிலையில் தவிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்

123 Views

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தஞ்சமடைந்த ரோஹிங்கியா மற்றும் வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் இன்றும் நிரந்தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் நிச்சயத்தன்மையற்ற நிலையில் தவித்து வருகின்றனர். 

குடும்பத்தினரை பிரிந்து சொந்த நாட்டில் உள்ள சூழல் காரணமாக வெளியேறிய இவர்களுக்கு இன்றளவிலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. அவர்களுக்கு உயிராபத்து என்ற நிலை இல்லாத போதிலும் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இவர்களில் பலர் விசாயின்றி தவித்து வருகின்றனர் என அகதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விசா இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியை பெறவோ வேலை செய்வோ உரிமையில்லை. இது போன்ற நிலையில் சுமார் 2000 அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியா எங்கும் உள்ளனர் என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் குறிப்பிட்டுள்ளது.

வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளரான கபிர் அவ்வாறானவர்களில் ஒருவர். கடந்த 2013ம் ஆண்டு அரசியல் அகதியாக தஞ்சமடைந்த அவருக்கு தொடகத்தில் தற்காலிக விசா வழங்கப்பட்டு இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் கடந்த 2018ம் ஆண்டு முதல் அவருக்கு விசா மற்றும் வேலை செய்வதற்கான உரிமையின்றி தவித்து வருகிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்த போது சாலாமன் தீவுகளைச் சேர்ந்த மேரியை சந்தித்திருக்கிறார். இவரைப் போல் அல்லாமல் மேரிக்கும் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கும் விசாவும் மருத்துவ உதவிக்கான அட்டையும் உள்ளது.

ஆனால் அனைத்துக்கும் அகதிகளுக்கும்/தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் கணக்குப்படி, அவுஸ்திரேலியாவில் ஹமித் போன்ற நிலையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதில் 65 ஆயிரம் பேர் தஞ்சக்கோரிக்கை விண்ணப்ப பரிசீலனைக்காக காத்திருக்கின்றனர். 19 ஆயிரம் பேர் தற்காலிக பாதுகாப்பு விசாவிலும் SHEV எனும் Safe Haven Enterprise விசாவிலும் உள்ளனர். தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் எந்த விசாக்களுமின்றி வேலை செய்வதற்கான அனுமதி மற்றும் இன்னும் பிற உதவிகளை பெறுவதற்கான அனுமதியுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் மற்றும் SHEV விசாக்கள் முறைக்கு முடிவு கட்டப்பட்டு சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தொழிற்கட்சி தேர்தலின் போது தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் எப்போது இதனை நடைமுறைக்கு கொண்டு வரும் என அகதிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply