சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்க – சுமந்திரன் வலியுறுத்தல்

சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்ய வேண்டும். அத்துடன் அவர் உடன் பதவி நீக்கப்பட வேண்டும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“விடுமுறை கொண்டாட்டம் ஒன்றிற்காக நண்பர்கள் சகிதம் சென்ற சிறைச்சாலைகள் நிர்வாகம் கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எமது தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பயன்படுத்த அத்த சிறைச்சாலை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.

அதனால் இரு அரசியல் கைதிகளை தன் முன்நிலையில் முழங்காலிட வைத்த இராஜாங்க அமைச்சர் அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளார்.

இந்த நாட்டில் சிறைச்சாலை அட்டூழியம் ஒன்றும் புதிதல்ல அதனை எந்த அரசும் காலம் காலமாக மேற்கொண்டே வந்துள்ளன. இதன் வெளிப்பாடாகவே அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகள் மீது துப்பாக்கியை வைத்துள்ளார். எனவே  அமைச்சரையும் அவரது கூட்டத்தையும் கைது செய்வதற்கு பதிலாக  அதிகாரிகளும் காவலர்களும் அமைச்சருக்கு சாமரம் வீசுவதில் கவனம் செலுத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமாகியுள்ள நேரத்தில் திட்டமிட்ட வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியா இது என்ற சந்தேகமும் எழுவதனால் குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கு துணைபோன அதிகாரிகள், ஆயுதங்களுடன் உட் செல்ல அனுமதித்த காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும் என சுமந்திரன் அரசாங்கத்தைக் கோரினார்.

சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்

இந்நிலையில், “தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும்” என தெரிவித்த  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ், சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள் என்றார்.

மேலும் கொரோனாக் காலத்தில் யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021