ஜனாதிபதி தோ்தலை ஒத்திவைக்க மற்றொரு சதி – எச்சரிக்கிறாா் உதய கம்மன்பில

gammanpila 768x449 1 ஜனாதிபதி தோ்தலை ஒத்திவைக்க மற்றொரு சதி - எச்சரிக்கிறாா் உதய கம்மன்பிலதேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ள அதே வேளை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச அச்சக திணைக்களத்துக்குள் போராட்டத்தை உருவாக்கி வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் சூழ்ச்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை உதய கம்மன்பில தெரிவித்தாா்.

அவர் மேலும்கூறுகையில், “யார் நீதிமன்றம் சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடும் போது தான் தேர்தல் குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. கடந்த முறை உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்ததன் பின்னர் அரச அச்சகத் திணைக்களம் ஊடாக தேர்தல் பணிகளை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியது” என்று சுட்டிக்காட்டினாா்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், “உள்ளுராட்சிமன்றம் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிவதற்கு அரச அச்சகத் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நிதி கோரிய போது ஆணைக்குழு திறைச்சேரியிடம் நிதி கோரியது. பொருளாதார பாதிப்பு என்று கூறி கொண்டு திறைச்சேரி அரச அச்சகத் திணைக்களத்துக்கு நிதி வழங்கவில்லை” என்று தெரிவித்தாா்.

“2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல் பணிகளுக்கு விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் திறை சேரி அதனை கவனத்தில் எடுக்கவில்லை. வாக்குச் சீட்டுகளை அச்சிடும் விடயத்தில் அரச அச்சகரின் நடவடிக்கைகளும் சந்தேகத்துக்குரியதாக காணப்பட்டன. ஏனெனில் முழுமையான நிதியை பெற்றதன் பின்னர் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பழக்கம் முன்னொருபோதும் இருக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் அச்சிடல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் காணாமலாக்கப்பட்டது” என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

தொடா்ந்து கருத்து வெளியிட்ட பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பில, “அரச அச்சகத் திணைக்களத்தை கேந்திரமாக கொண்டு தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது. ஏனெனில் அரச அச்சகத் திணைக்களம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அரச அச்சகத் திணைக்கள சேவையாளர்களின் மேலதிக கொடுப்பனவுகளை இரத்து செய்வதற்கும், பொரளையில் உள்ள அரச அச்சகத் திணைக்களத்தை கொழும்பு புற நகர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது” என்று தெரிவித்தாா்.

“இந்த பரிந்துரைகளினால் அரச அச்சகத் திணைக்களத்தில் சேவையாளர்கள் விசனமடைந்துள்ளனர் . இவ்வாறான நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்த பரிந்துரைகளை செயற்படுத்தினால் அரச அச்சகத் திணைக்களத்தின் சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் இதனால் வாக்கெடுப்பு சீட்டு அச்சிடல் பணிகள் ஸ்தம்பிதமடையும். இதுதான் அந்த சூழ்ச்சி” என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பில தெரிவித்தாா்.