ஜனாதிபதி மீண்டும் பணியில்-எரிவாயுவை விநியோகம் குறித்து அறிவிப்பு

105 Views

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Pres 1 ஜனாதிபதி மீண்டும் பணியில்-எரிவாயுவை விநியோகம் குறித்து அறிவிப்பு

இந்த நிலையில், எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்ததையடுத்து, எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply