மனித உரிமைகள் தொடர்பான அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிக்கின்றது – வெளிநாட்டு அமைச்சு

அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்துக்கள், இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் கடந்த 2022 ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்ற கருத்து பரிமாற்றத்தின்போது, நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

“ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும்” என அம்பிகா சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், அம்பிகா சற்குணநாதனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அம்பிகா சற்குணநாதனது கருத்துக்கள் கவலை அளிப்பதாகத்  தெரிவித்துள்ளது.

Tamil News