ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

164 Views

Afghan airstrikes ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

தலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்தி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின் ஆப்கானிஸ்தானின்  பெருமளவிலான நிலப்பரப்பை தலிபான்கள் கைப்பற்றி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply