தற்போது ஆப்கானிஸ்தானில் வியக்கத்தக்க வகையில் நான்கில் மூன்று பேரால் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை எங்கும் காணப்படுகிறது, சுகாதாரத் துறை திணறி வருகிறது மற்றும் ஒருகாலத்தில் இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கிய உதவிகள் சிறுபகுதியாக குறைந்துவிட்டன.
நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பஞ்சத்தை சந்தித்து வருகிறது; ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்குக்கும் அதிகமானோர், அதாவது 47 இலட்சம் பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



