புல்மோட்டை :முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்க-மாணவர்கள் பெற்றார்கள் போராட்டம்

மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறைதிருகோணமலை-புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதான கதவை மூடி மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி இந்த  போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

திறமையான மாணவர்கள் பலர் உள்ளோம். ஆனால் வழிநடாத்த ஆசிரியர்கள்தான் இல்லை.1200 மாணவர்களுக்கு 24  ஆசிரியர்கள் எந்த விதத்தில் நியாயம். திறமையான மாணவர்களை வழி நடாத்த ஆசிரியர் தரவேண்டும். இடமாற்ற அதிகாரம் உள்ள ZDEக்கு ஆசிரியர்கள் தர அதிகாரம் இல்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1905 ஆம் ஆண்டு புல்மோட்டையில் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் வேளையில் 64 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போரிலும் 24  ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News