முல்லைத்தீவு-மாணவிகள் இருவரை காணவில்லை என தகவல்

மாணவிகள் இருவரை காணவில்லை

மாணவிகள் இருவரை காணவில்லை

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் நேற்றைய தினம் மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய மாணவிகள் இருவர் நேற்று (16) வழமைபோன்று மாலைநேர வகுப்பிற்கு சென்றிருந்தனர்.

புதுமாத்தளன் பகுதியில் இருந்து அம்பலவன் பொக்கணை பகுதியில் உள்ள கல்வி நிலயத்திற்கு சென்றிருந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பெற்றோரால் முல்லைத்தீவு காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிக்ள இருவர் காணமல்போன தகவல் பரவியதும் குறித்த பகுதி மக்களும் இணைந்து மாணவிகளை தேடிவருகின்றனர்.