அவசரகால நிலை நீடிப்பு சுற்றுலாத்துறையை கடுமையாக பாதிக்கும்

அவசரகாலச் சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டமையானது இலங்கைக்கு தேவையான அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் சுற்றுலாத்துறைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை ஹோட்டல்கள் சங்கத் (THASL) தலைவர்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அதிக தாமதமின்றி நீக்குவார் என்று சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்த்த போதும் நேற்று மாலை, அவசரகாலச் சட்டத்தை தொடர பாராளுமன்றத்தில் 120 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இவ் வாறு அவசரகால நிலை நீடிக்கப்பட்டமையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும். இதேவேளை மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகளை வெளியிடும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆலோசனைகளை அகற்றுவதும் சாத்தியமற்றது என்று Sri Lanka Association of Inbound Tour Operators இன் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு எதிராக வழங்கப்படும் பயண ஆலோசனைகளால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. மேலும், அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணக் காப்பீடுகளை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது. அவர்கள் காப்பீடுகளை வழங்க முன்வந்தாலும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகமாகும். இது எமக்கு நல்லதல்ல என  மேலும் தெரிவித்துள்ளார்.