உலக சதுரங்க போட்டி இன்று சென்னையில் ஆரம்பம்

279 Views

44-வது உலக சதுரங்கப் போட்டியான செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவின் செஸ் தலைமையகமாக கருதப்படும் சென்னைக்கருகே, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியின் தொடக்கவிழா இன்று நடக்கிறது.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பியாட் சுடர் இந்தியாவில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்குப் பயணித்து நாட்டில் உள்ள 75 முக்கிய இடங்களுக்குப் பயணித்து மாமல்லபுரம் வந்தடைந்தது. அங்கிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள உலக செஸ் கூட்டமைப்பான ஃபிடே அலுவலகத்துக்கு சென்றுள்ளது.

இப் போட்டியில் இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply