போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு  அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது அவர்களுடைய தொலைபேசிகள் இடைமறித்து கேட்கப்படுவது உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

சட்டத்தரணி நுவான்போபகே,அருட்தந்தை அமில ஜீவந்த பீரிஸ் ஐயுஎஸ்எவ் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே முன்னாள் ஏற்பாட்டாளர் லகிருவீரகேகர உட்பட பலர் அரசாங்கத்தால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 09 ஆம் திகதி கோட்டையிலும், ஜூன் மாதம் 10 ஆம் திகதி பத்தரமுல்ல இசுறுபாயவிற்கு முன்பாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமைக்காக புஷ்பிகா நேற்று(புதன்கிழமை) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

27 வயதான தொடம்துவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு – கோட்டை காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளராக ஒருவராக ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா செயற்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.