சீனாவுடன் உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள் – இலங்கையிடம் IMF கோரிக்கை

79 Views

இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ளது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிதியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனா ஒரு பெரிய கடன் வழங்குநராக உள்ளது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பில் இலங்கை சீனாவுடன் தீவிரமாக பேச்சுகளில்  ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார்.

ரொயிட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply