இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறார் – ஐ.நா

120 Views

பிரசவத்தின் போது உலகில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கும் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

2016 இற்கு பின்னர் மிகவும் சில நாடுகளில் தான் இத்தகைய இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2000 ஆண்டு தெடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருற்தது. ஆனால் அது கடந்த 5 வருடங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது.

பிள்ளையை பிரசவிப்பது என்பது பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உலகில் மில்லியன் கணக்கான மக்களுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே இருக்கின்றது. அவர்களுக்கு நவீன வசதிகள் கிடைப்பதில்லை. தரமான சுகாதார வசதிகள் இருப்பின் இதனை குறைக்க முடியும்.

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அது 35 விகிதத்தால் குறைந்துள்ளது. ஆபிரிக்காவில் தான் 70 விகிதமான இறப்புக்கள் நிகழ்கின்றன. ஒரு இலட்சம் பேருக்கு551 பேர் இறக்கின்றனர். இது ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்காகும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply