நீண்ட இடைவெளியின் பின் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம்

106 Views

நீண்ட இடைவெளியின் பின் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை விஜயம் | First Batch Of Chinese Tourists Post Covid Arrives

கொரோனா தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பயணிகள் குழு நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று ஆரம்பமானதை அடுத்து, ஏனைய பல்வேறு நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சுகாதார பாதுகாப்பு கருதி, இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தமையினால் இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது.

இந்தநிலையில், மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சுற்றுலா தொடர்பான விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது.

அதனடிப்படையில் ஏனைய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததுடன், நேற்றைய தினம் முதலாவது சீன சுற்றுலா குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களை, இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply