பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்யும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது

‘இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும்’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டு;ளார்.
‘இலங்கையுடனாக நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்று அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடும் எட்டப்பட்டது’.

‘இந்த விடயம் தொடர்பில் நிறைவேற்று சபை ஆராய்ந்து அனுமதியளித்ததன் பின்னர் இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அதேநேரம் இலங்கையின் சீர்திருத்த செயற்பாடுகள் பாராட்டத்தக்க விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன’. ‘2024ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் பொருளாதாரம் 5.5 சதவீதம் விரிவடைந்தது’.

‘2024 நான்காம் காலாண்டில் பணவீக்கமானது இலக்கை விடவும் மிகக் குறைவாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’. ‘அத்துடன் 2024ஆம் ஆண்டின் இறுதியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசக் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ‘2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு உட்பட்டு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.