புளூட்டோவிற்கு அப்பால், குள்ளக்கோள் என்று வகைப்படுத்தப்படக்கூடிய ஒரு பெரிய பனிக்கட்டி விண்பொருளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது சூரிய குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விண்பொருட்களின் பட்டியலில் புதிய உறுப்பினராகச் சேர வாய்ப்புள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவலை, சிலியில் அமைந்துள்ள ‘வேரா சி. ரூபின் ஆய்வகம்’ (Vera C. Rubin Observatory) வியாழக்கிழமை(29) வெளியிட்டது. அமெரிக்க நிதியுதவியுடன் இயங்கும் இந்த ஆய்வகத்தில், வானியல் ஆராய்ச்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய 3.2 ஜிகாபிக்சல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
‘2026 ED138’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், 600 முதல் 1,500 கிலோமீட்டர் விட்டம் கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது இதுவரை கண்டறியப்பட்ட குள்ளக்கோள் வேட்பாளர்களிலேயே மிகப்பெரியவற்றில் ஒன்றாக இருக்கலாம். இது தற் போது சூரியனிலிருந்து பூமியை விட சுமார் 46 மடங்கு அதிக தொலைவில் உள்ளது. ஒப்பீட்டளவில், புளூட்டோ சூரியனிலிருந்து சராசரியாக 40 மடங்கு அதிக தொலை வில் அமைந்துள்ளது.
பால்வெளி மண்டலத்தின் (Milky Way) தளத்திற்கு அருகில், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நிறைந்த பின்னணியில் இருந்ததால், இந்த விண்பொருள் இதுவரை கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம். இருப்பி னும், ரூபின் ஆய்வகத்தின் தொடர்ச்சியான படங்கள் மற்றும் கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகளால் இதன் நகர்வைக் கண்டறிய முடிந்தது.
இது உறுதிப்படுத்தப்பட்டால், சர்வதேச வானியல் ஒன்றியத்தால் (International Astronomical Union) அங்கீ கரிக்கப்பட்ட ஐந்து குள்ளக்கோள்களுடன் (எரிஸ், ஹௌமியா, மேக்மேக், செரெஸ் மற்றும் புளூட்டோ) இதுவும் இணையும். இதில் புளூட்டோ, 2006-ஆம் ஆண்டில் மறுவகைப்படுத்தப்படும் வரை சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டது. குள்ளக்கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன; அவை தங்களின் ஈர்ப்பு விசையினால் ஏறக்குறைய கோள வடிவம் கொண்டவையாக மாறுகின்றன. ஆனால், இவை தங்க ளின் சுற்றுப்பாதையில் பிற விண்பொருட்களையும் கொண்டிருக்கின்றன.
சர்வதேச வானியல் ஒன்றியத்தால் அதிகாரபூர் வமாகமாக அங்கீகரிக்கப்பட்ட கடைசி குறுங்கோள் ‘ஹௌமியா’ (Haumea) ஆகும்; இது 2008-ல் அங்கீகரிக் கப்பட்டது.



