மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக [ 1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள், 2) இன்றைய கிழக்குஆசியா சவால்கள், 3) இன்றைய கிழக்குஐரோப்பிய சவால்கள், 4) இன்றைய இஸ்லாமியஉலக சவால்கள், 5) இரண்டாவது சக்தி ]  வெளியிட்டு வருகிறோம்.அவ்வகையில் இதன் நான்காவது பகுதியை இங்கு தருகிறோம்.

இன்றைய இஸ்லாமிய உலக சவால்கள்

இன்று சவாலாக விளங்கும் மூன்றாவது இடத்தை, இஸ்லாமிய உலகத்தை, இப்போது கவனிப்போம். 2001 செப்டம்பர் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் ஜோர்ஜ் புஸ் பிரகடனப்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் (ப.ஏ.போ) அரங்கமாகவும் இந்த இஸ்லாமிய உலகமே உள்ளது. உண்மையில் இப்பிரகடனம் 2001 இல் இரண்டாவது முறையாக புஸ் பிரகடனப்படுத்தினார் என்பதுதான் உண்மை.

இதை முதலாவது தரமாக ரொனால்ட் ரேகன் பதவியேற்ற போது பிரகடனப்படுத்தினார். “நாகரீதத்தை அழிக்க பரவும் நோய்” என்றும் “தற்காலத்திலும் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்புதல்” என்றும் அப்போது தமது எதிரியாக கண்டவர்களை ரேகனும் அவரது ஆட்சியளர்களும் விபரித்தார்கள். முதலாவது ப.எ.போ இப்போ வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது. அப்போது அது மத்திய அமெரிக்காவிலும், தெற்கு ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் கொடூரமான போராக மாறியது. அதன் மோசமான எதிரொலிகளையே இன்று நாம் பார்க்கிறோம்.

ஐ-அமெரிக்காவின் முதலாவது ப.ஏ.போரின் கொடுமைகளுக்காக உலக நீதிமன்றம் ஐ-அமெரிக்காவை கண்டித்தது. அந்த கண்டனத்தை ஐ-அமெரிக்க உதாசீனம் செய்தது. இவையெல்லாம் வரலாற்றில் சொல்லக்கூடியவைகள் அல்லாததால் அவை மறக்கப்பட்டு விட்டன.

புஸ்-ஒபாமா சனாதிபதிகளின் ப.எ.போரின் வெற்றிகள் இப்போது நாம் நேராகவே பார்த்து கணிக்கலாம். இப் ப.எ.போ பிரகடனப் படுத்தப்பட்டபோது, அது பழங்குடி ஆப்கானிஸ்தானின் ஒரு சிறு மூலையாகவே இருந்தது. தலிபானை வெறுத்த ஆப்கான் மக்களே, அவர்களின் பழங்குடி கலாச்சாத்தின் அடிப்படையில் தலிபானை பாதுகாத்தார்கள். 25 மில்லியன் டொலர்களுக்கும் இவர்களை காட்டிக்கொடுக்க மறுத்த பழங்குடிகள் ஐ-அமெரிக்கர்களை ஒரேயடியாக குளப்பினார்கள்.

ஒரு திட்டமிட்ட காவல்துறை நடவடிக்கை ஊடாகவோ அல்லது தலிபானுடன் தீவிர ராசதந்நதிர பேச்சுவார்த்தை ஊடாகவோ இரட்டைகோபுர தாக்குதலின் குற்றவாளிகளை ஐ-அரெிக்காவின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் இம்மாதிரியான சாத்தியங்கள் கணக்கில் எடுக்கப்படவே இல்லை. மாறாக உடனடி எதிர்வினையாக பெரும் வன்முறையே கையிலெடுக்கப்பட்டது.000 1H10CT 0 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

அப்போதைய இதன் நோக்கம் தலிபானை அழிப்பது அல்ல. இது பின்னர் சேர்க்கப்பட்டது. பின்-லாடனை ஐ-அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக தலிபான் அப்போது முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு ஐ-அமெரிக்காவின் வெறுப்பை காட்டுவதற்காகவே ஒரு பெரும் வன்முறையை ஐ-அமெரிக்கா முன்னெடுத்தது. இவ்வாறு தலிபான் முன்மொழிந்ததை ஐ-அமெரிக்கா சிறிதும் ஆராய முன்வராததால் தலிபானின் முன்மொழிவு எத்துணை உண்மையானது என்பது எங்களுக்கு தெரியாது.

“ஐ-அமெரிக்கா தனது வலிமையையும் அதனால் வரும் வெற்றியையும் காட்டி உலகத்தை பயமுறுத்துவதே நோக்கமாக இருந்திருக்கலாம். அதனால் ஆப்கான் மக்கள் எத்துணை துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பதெல்லாம் ஐ-அமெரிக்காவின் கரிசனை அல்ல” என்று பலராலும் மதிக்கப்படும் அப்துல் ஹாக் என்ற தலிபானுக்கு எதிரான ஆப்கான் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

“தலிபானை வீழ்த்துவதற்கு அதனுள்ளிருந்தே முயற்சித்துக்கொண்டிருந்த பல சக்திகள் ஐ-அமெரிக்காவின் ஆப்கான் போரை கடுமையாக கண்டித்தன. தலிபானை அழிக்கும் தமது முயற்சிகள் வெற்றி பெறும் சாத்தியங்கள் இருந்ததாகவும் ஐ-அமெரிக்க குண்டு தாக்குதல்  தமது முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு என்று அவர்கள் கருதினார்கள்.” என்றும் அப்துல் ஹாக் சொல்லியிருக்கிறார்.

ஆப்கான் போர் வெள்ளை மாளிகையில் முடிவு செய்யப்பட்ட போது அக் கூட்டத்தில் இருந்தவர் ரிச்சார்ட் கிளார்க். இவர் வெள்ளை மாளிகையின் பயங்கரவாதத்திற்கெதிரான பாதுகாப்பு குழுவின் தலைவராக அப்போதிருந்தார். இப்போர் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று அக்கூட்டத்தில் சொல்லப்பட்ட போது “சர்வதேச சட்டம் பற்றி எனக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு பெரும் அடி கொடுக்கப்போகிறோம்” என்று சனாதிபதி சொன்னதாக ரிச்சர்ட் கிளார்க் எழுதியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பணிசெய்து கொண்டிருந்த பல உதவி அமைப்புக்களும் இப்போருக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு பல மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பபடும் நிலைமை உள்ளதாகவும் போரினால் நிலைமை நினைக்க முடியாத அளவுக்கு மோசமாகும் என்றும் எச்சரித்தார்கள்.

பல ஆண்டுகளின் பின்னரும் ஏழை ஆப்கான் மக்களின் நிலைமையை இங்கு நாம் விபரிக்க தேவையில்லை.

ஐ-அமெரிக்காவின் பெரும் போருக்கான அடுத்த இலக்கு இராக். நம்பகத்தன்மையுள்ள எவ்விதமான காரணமும் இன்றி தொடுக்கப்பட்ட இப்போர், 21ம் நூற்றாண்டின் மாபெரும் குற்றம். ஐ-அமெரிக்க-பிரித்தானிய கூட்டால் முன்னெடுக்கப்பட்ட இராக்கின் மேலான முற்றுகையில் பல நூறாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இராக்கின் மேல் ஏற்கனவே போடப்பட்ட ஐ-அமெரிக்க-பிரித்தானிய தடைகளால் இராக் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. இதை அப்போதே “இனவழிப்பு” என்று பலர் விபரித்தார்கள். இராக்கின் மேல் போடப்பட்டிருந்த தடைகளை கண்காணித்த இரண்டு சர்வதேச இராசதந்திரிகள் ஏற்கவே இத்தடைகள் “இனவழிப்பானது” என்று சொல்லி தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்கள்.2 1 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

இராக்கின் மேலான முற்றுகை பல மில்லியன் அகதிகளை உருவாக்கியது, அந்நாட்டை அழித்ததது, இதனால் உருவான பிளவுகள் இன்றும் அந்நாட்டையும் அப்பிராந்தியத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றும் எம்மிடையே தாம் அறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், இப்போரை “இராக்கின் விடுதலை” என்று விபரிப்பது அதிசயமானது.

பென்றகனும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் நடாத்திய கருத்துக்கணிப்பில் பின்வருவன தெரியவந்துள்ளது. 3 வீதமான இராக்கி நாட்டினரே, தங்கள் அயலில் ஐ-அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கை நியாயமானது என்று கருதுகிறார்கள். 1 வீதத்திற்கும் குறைவனவர்களே ஐ-அமெரிக்க-பிரித்தானிய படைகள் தமது பாதுகாப்பிற்கு நன்மையானது என்று கருதுகிறார்கள். 80 வீதமானவர்கள் இப்படைகள் தங்கள் நாட்டில் தரித்திருப்தை எதிர்க்கிறார்கள். பெரும்பான்மையினர் இப்டைகளின் மேல் நடக்கும் தாக்குதல்களை ஆதரிக்கிறார்கள்.

இதுமாதிரியான ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கும் நிலை கூட ஆப்கானிஸ்தானில் இல்லை. அந்நாடு அந்தளவுக்கு சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது. அங்கும் இதே மாதிரியான கருத்துகள் நிலவும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். முக்கியமாக இராக்கில், ஐ-அமெரிக்கா தனது போருக்கான நோக்கில் தோல்வியே கண்டிருக்கிறது. இராக்கை அழித்தது மட்டுமல்லாமல், இரானிடம் இராக்கை கையளித்துவிட்டது ஐ-அமெரிக்கா.

இதுமாதிரியான பெரும் போர்கள் வேறு இடங்களிலும் தொடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக லிபியாவில். இங்கு மூன்று ஏகாதிபத்திய சக்திகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐ-அமெரிக்கா இணைந்து செயற்பட்டன. இவை முதலில், 1973 இல், ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்று நிறைவேற துணை போயின. ஆனால் அது நிறைவேற்றிய உடனேயே அதை மீறின. இக்கூட்டணியின் விமானப்படை தாக்குதல்களை ஆரம்பித்தது. இதனால் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகள் எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.

லிபியா நாடு அழிக்கப்பட்டது. லிபியா நாடானது ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பல இராணுவ குழுக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. முக்கியமாக, “இஸ்லாமிய அரசு” (ISIS) படையின் தளமாக லிபியா மாறியது. அங்கிருந்து ISIS அதன் பயங்கரவாதத்தை பரப்பவும் வழிசெய்தது.4 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

ஆபிரிக்க ஒன்றியம் முன்மொழிந்த ஒரு நல்ல திட்டத்தை லிபிாவின் முகமர் கடாபியும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஏகாதிபத்திய மும்மூர்த்திகள் இதை உதாசீனம் செய்தார்கள். ஆயுதங்கள் ஏராளமாக போய் சேரவும், மேற்கு ஆபிரிக்காவிலும் லிபியாவை சுற்றியுள்ள நாடுகளிலும் பயங்கரவாதம் பரவவும் இப்போர் உதவின. ஆபிரிக்காவிலிருந்து அகதிகள் ஐரோப்பாவை நோக்கி வெள்ளமாக திரளவும் இப்போர் காரணமாயிற்று.

இதுவும் “மனிதாபிமான தலையீடுகளின்” இன்னுமொரு வெற்றி. இது போன்ற பல கொடூரமான தலையீடுகளின் நான்கு நூற்றாண்டு நீளமான வரலாற்றில் இதுவொன்றும் புதிதும் அல்ல.

தொடரும்…..

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) தமிழில் ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) தமிழில்- ந.மாலதி