சிறுபான்மை மக்களை குறிவைக்கும் சிங்கள தேசிய ஊடகங்கள்

குறிப்பிட்ட சிறுபான்மை சமூகம் ஒன்றே கொரோனா நோய் தொற்றுதலுக்கு காரணம் என சிங்கள தேசிய ஊடகங்களும், சிங்கள சமூகவலைத்தளங்களும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக பத்திரினையாளர் சமேளனம் தெரிவித்துள்ளது.

தென்னாசியாவில் ஊடக சுதந்திரம் என்னும் தனது 18 ஆவது அறிக்கையில் அது இதனைத் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் குறித்து சமநிலையுடன் செய்திகளை வெளியிடுவது சவாலான விடயமாக மாறியுள்ளது. எதிர்பார்த்தது போல சிறீலங்கா அரசும் தனது அதிகளவான அதிகார வழிமுறைகளை பயன்படுத்துகின்றது. காவல்துறையினருக்கும் படையினருக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிங்கள ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் இந்த நோய்க்கு குறிப்பட்ட சிறுபான்மை சமூகமே காரணம் என பிரச்சாரம் செய்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.