மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மேலே குறிப்பிட்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று சவாலாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றி இதில் பேசுகிறார். இக்கட்டுரையின் முதல்பகுதியை ‘மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்’ என்ற தலைப்பில் கடந்தவாரம் தந்திருந்தோம்.அதன் இரண்டாவது பகுதி இதுவாகும்.

இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்

“அமெரிக்காவின் ஏரி” போல என்று விபரிக்கப்ட்ட பசுபிக் கடலை எடுத்துக் கொள்வோம். அண்மைய ஒரு அறிக்கையில், ‘ஐ-அமெரிக்காவின் B-52 குண்டு விமானம் கிழக்கு சீன கடற்பரப்பில் அதனது ஒரு வழமையான பணியின் போது தவறுதலாக சீனா கட்டியுள்ள செயற்கை தீவின் அண்மையாக பறந்தது. இது வாஷிங்டனும் சீனாவும் கடுமையாக மோதும் ஒரு விடயம் என்று பாதுகாப்பு உயரதிகாரிகள் சொன்னார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கு முந்திய வல்லரசுகளின் பயங்கரமான அணுவாயுத பந்தயத்தின் வரலாற்றை தெரிந்தவர்களுக்கு, இம்மாதிரியாக சம்பவங்கள் பலமுறை அணுவாயுதப் போரை தூண்டும் அபாயமான நிலைக்கு முன்னர் வந்தது நினைவிருக்கும்.
70 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அணுவாயுத போருக்கு அண்மையாக வந்தது போல மேலே கூறிய 2018 சமப்வத்தை தொடரந்து சீனா தனது அணுவாயுத விமானங்களை அமெரிக்காவுக்கு அண்மையாக கொண்டுவரவில்லை.

தமது வணிகத்திற்கான கடல் பாதையெங்கும், ஜப்பானிலிருந்து மலாக்க நீரிணை ஊடாகவும் அப்பாலும், பகைமை சக்திகள் நிறைந்திக்கின்றன என்பது சீனாவின் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவையெ்லாம் பெருமளவில் ஐ-அமெரிக்க இராணுவத்தால் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் அவர்களுக்கு தெரியும்.

இதனால், சீனா அதிக வளங்களை போட்டு மேற்குபுறமாக தனது வணிகபாதைகளை வளர்த்து அவற்றை கவனத்துடன் இணைத்து வருகிறது. சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization (SCO)) வரைபுக்கு அமைவாகவே இவைற்றை சீனா செய்து வருகிறது.Shanghai Cooperation Organisation2 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

இவ்வமைப்பில் மத்திய-ஆசிய நாடுகள் மற்றும் ரசியா உள்ளன. விரைவில் இந்தியா, பகிஸ்தானும் இதில் இணையும். இரான் இதன் ஒரு பார்வையாளராக இருக்கும். பார்வையாளராகவும் ஐ-அமெரிக்காவுக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதோடு இப்பிராந்தியத்தில் உள்ள ஐ-அமெரிக்க இராணுவ தளங்களை மூடுமாறு அந்த அமைப்பு வேண்டுகோளும் விடுத்துள்ளது (“US Military Bases Around the World” என்று இணையத்தில் தேடினால் பிரமிப்பாக இருக்கும்).

இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக பழைய காலத்து “பட்டுப்பாதை” போன்ற ஒரு புதிய பாதையை சீனா கட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, இப்பாதை வழியாக ஐரோப்பாவையும் எண்ணெய் வளம் கொண்ட மத்திய-கிழக்கு நாடுகளையும் அடையலாம். ஒன்றிணைக்கப்பட்ட ஆசியவுக்கான சக்தி (energy) மற்றும் உற்பத்தி ஒழுங்கை உருவாக்குவதற்காக சீனா பெருமளவான வளங்களை கொட்டுகிறது. அதிவேக ரயில் பாதைகளை உருவாக்கிறது, எண்ணெய் குழாய்களையும் போடுகிறது.

இத்திட்டங்களின் ஒரு பகுதியாக உலகிலேயே உயரமான மலைகளூடாக சீனா அமைத்திருக்கும் பெருவீதி பகிஸ்தானிலுள்ள சீனாவின் கவுடார் துறைமுகத்துக்கு போகிறது. சீனாவின் கடல் வணிகத்தில் ஐ-அமெரிக்கா தலையிட முடியாத பாதையாக இது உள்ளது. இத்திட்டங்கள் பகிஸ்தானில் வளர்ச்சியை தூண்டும் என்றும் சீனாவும் பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. பெருமளவான இராணுவ நிதியுதவிகளை பகிஸ்தானுக்கு வழங்கிய ஐ-அமெரிக்கா இம்மாதிரி வளர்ச்சி திட்டங்ளை அங்கு முன்னெடுக்கவில்லை. சீனாவுக்கு அதன் மேற்கு ஷின்சியாங் மாநிலத்தில் பயங்கரவாத பிரச்சனை உள்ளதால், பகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு பயங்கரவாதங்களை பகிஸ்தான் அடக்குவதற்கு இத்திட்டங்கள் உதவலாம் என்றும் சீனா எதிப்பார்க்கிறது.மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

வணிக நோக்கத்தோடு இந்திய கடலில் சீனா அமைத்து வரும் “முத்து மாலை” தளங்களின் ஒரு பகுதியாக இந்த கவுடர் துறைமுகம் இருக்கும். இது இராணுவ தேவைகளுக்கு பாவிக்கப்படலாம். தற்காலத்தில் சீனா தனது செல்வாக்கை பாரசீக வளைகுடா வரையும் பரப்புவதற்கு இது ஏதுவாக இருக்கும்.
ஐ-அமெரிக்காவின் இராணுவ பலத்தால் பாதிக்க முடியாத திட்டங்களாக இத்திட்டங்கள் யாவும் உள்ளன. ஒரேயொரு வழியில் மட்டுமே, அதாவது அணுவாயுதப் போரின் மூலம் மட்டுமே, ஐ-அமெரிக்கா இத்திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது ஐ-அமெரிக்காவையும் அழித்துவிடும்.

ஆசியா கட்டுமான நிதி வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) என்றவொரு வங்கியையும் சீனா 2015இல் உருவாக்கியது. அதன் முக்கிய பங்குதாரியாக சீனாவே உள்ளது. பெய்ஜிங்கில் நடந்த அதன் திறப்பு விழாவில் 56 நாடுகள் பங்குபற்றின. அதில் ஐ-அமெரிக்க கூட்டாளிகளான அவுஸ்திரேலியாவும், பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக பங்குபற்றின. ஐ-அமெரிக்காவும் ஜப்பானும் பங்குபற்றவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புக்களுக்கு போட்டியாக இவ்வங்கி வளரலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் ஐ-அமெரிக்காவின் செல்வாக்கில் இயங்குகின்றன.First annual meeting of the Asia Infrastructure Investment Bank in 2016 UNIDO Flickr CC BY ND 2.0 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் (Shanghai Cooperation Organization (SCO)) ஒரு காலத்தில் நேற்றோவுக்கு (NATO) மாற்றாக வளரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும்…..

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி