ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் இராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.

அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் தொடர் வான்​வழித் தாக்​குதல்​களுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், ஈரான் கண்​ணுக்கு கண் அதாவது ‘பழிக்​குப்​பழி’ வாங்​கும் தனது ராணுவ நடவடிக்​கை​யின் மூன்​றாம் கட்​டத்​தைத் தொடங்​கி​யுள்​ளது.

ஈரான் தனது முதற்​கட்ட நடவடிக்​கை​யில் ஜோர்​டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்​படை தளத்​தைக் குறி​வைத்து தாக்​கியது. அங்​குள்ள அமெரிக்​கா​வின் பல ஆயுதக் கிடங்​கு​களும் எரிபொருள் நிலை​யங்​களும் தீக்​கிரை​யாக்​கப்​பட்​டன. 2-வது கட்​ட​மாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படை மற்​றும் விமானப்​படைக்​குச் சொந்​த​மான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது.