சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தான் கடிதம் எழுதி ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டதையடுத்து சீனா அதற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
”ஹோர்மூஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறக்கிறேன் என்பதில் சீனா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை அவர்களுக்காகவும், உலகத்திற்காகவும் செய்கிறேன்” என ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இப்படியான நிலைமை மீண்டும் ஒருபோதும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



