போலி தொழிலாளர் விசா கறுப்புச் சந்தையாக பிரித்தானியா!

போலி திறமையான தொழிலாளர் விசா நடைமுறைகள் பிரித்தானியா முழுவ தும் ஒரு கறுப்புச் சந்தையாக செயல்பட்டு வருவதாக தி டைம்ஸ் நடத்திய இரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2020 இல் அறிமுகப் படுத்தப்பட்ட திறமையான தொழிலாளர் விசா முறையை சுரண்டு வதற்கான ஒரு வலையமைப்பை அதன் விசாரணை அம்பலப்படுத்தியதாக செவ்வாயன்று(27) டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முகவர்கள் விண்ணப் பதாரரின் ஐடியை எடுத்து ஊதியம் மற்றும் வரி பதிவுகளை உருவாக்குவதற்கு முன்பு ஒரு CoS ஐ வழங்குவதாக கூறப்படுகிறது. ஆவணத்தில், புலம் பெயர்ந்தவர் திறமையானவராகவும், நல்ல ஊதியம் பெற்றவராகவும், திறமையான தொழிலாளர் விசாவிற்கு தகுதியுடையவராகவும் குறிப்பிடப்படுகின்றார் என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.
உண்மையில், “ஊதியம் மட்டுமே” உண்மையான வேலையை அவர்கள் வழங்குவதில்லை, விசா வழங் கப்பட்டவுடன் புலம்பெயர்ந்தோரை வேறு பணிகளு க்கு கட்டாயப்படுத்துகின்றனர். அவர்கள் போலி ஊதி யம் மற்றும் கூடுதல் கட்டணங்களை திருப்பிச் செலுத்த வேண்டும், சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு நூற்றுக் கணக்கான பவுண்டுகள் அல்லது ஸ்பான் சர்ஷிப்பை இழக்கும் அபாயம் உள்ளது.
போலி வேலை விசாக்கள் £20,000 ($27,500) வரை செலவாகும் என்றும், முக்கியமாக நாடுகடத்தல் அல்லது நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளும் நபர்களாலும், விசாக்கள் காலாவதியான பிறகு தங்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களாலும் இந்த விசாக்கள் பயன் படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்தங் களை ஏற்பாடு செய்வதற்கு முகவர்கள் பணத்தை பெறுகிறார்கள்.
டைம்ஸ் தனது நான்கு மாத விசாரணையில், ரகசிய படப்பிடிப்பையும் பெருமளவான விசா முகவர் களுடனான நேர்காணல்களையும் பயன்படுத்தி, 250 க்கும் மேற்பட்ட போலி வேலைகள் வழங்கப்படுவதை ஆவணப் படுத்தியதாக கூறியது, பெரும்பாலும் சமூக ஊடகங்கள் வழியாக இது நடைபெறுகின்றது. மோசடி திட்டத்தின் முழு நோக்கம் தெளிவாக இல்லை.
இந்த மோசடி குறித்து அவசர விசாரணையைத் தொடங்குவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. “இந்த சட்டவிரோத நடவடிக்கையை நாங்கள் விசாரித்து வருகிறோம், இது பொறுத்துக்கொள்ளப்படாது” என்று அது தி டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.