இந்தியாவுடனான ஒப்பந்தம் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்ததாது : சரத் பொன்சேகா

இந்தியா வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை என்றும் இந்தியாவுக்கு அதற்கான தேவைப்பாடு இல்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும்.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் கட்சிகளுக்கு முக்கியத்துவமளிக்காது பொறுத்தமானவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்ற பாரிய நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் பொருளாதார ஒப்பந்தங்கள் எம்மைப் போன்ற மிகச் சிறிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எமது வீழ்ச்சி எந்த வகையிலும் அந்த நாட்டையும் பாதிக்காது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு கடலில் நெத்தலி மீனைப் போன்றது என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.எனவே இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தாது.

காரணம் இப்போதும் இலங்கை செல்வந்த நாடல்ல. மக்கள் மூன்று வேளை உணவை உண்பதற்கு கூட சிரமத்தையே எதிர்கொள்கின்றனர். இது வரலாற்று ரீதியாக எமது நாட்டில் காணப்படும் பிரச்சினையாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.