தேர்தல் அமைதி காலம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது…

தேர்தல் அமைதி காலம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தி அறிக்கையில் மாத்திரம் ஒலி, ஒளிபரப்ப முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.