இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இருந்து சில முக்கிய தகவல்கள்…
Addressing the nation from the Red Fort. Watch. https://t.co/wEX5viCIVs
— Narendra Modi (@narendramodi) August 15, 2021
*“எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் இரயில் இந்தியாவின் 70 வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
*ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.
*இந்தியாவில் 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் தான் மிகப் பெரியது. இந்தியர்கள் கொரோனாவை மிக பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார்கள். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
*இந்தியா தடுப்பூசிக்காக யாரையும் சாராமல் இருக்கிறோம். அது நம் தொழில் துறையினர், விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
*ஓகஸ்ட் 14ஆம் திகதியை பிரிவினை கோரங்களை நினைவு கோரும் நாளாக அனுசரிக்க முடிவு செய்திருக்கிறோம்.
*நம் இலக்குகளை அடைய அனைவரின் முயற்சியும் அவசியம்.இந்தியா தன் 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாம் நம் இலக்குகளை அடைந்திருக்க வேண்டும்.
*உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளோடு, குறைந்த அரசு தலையீட்டோடு, அதிக நிர்வாகம் நிறுவப்படுவது தான் நம் இலட்சியம்.
*இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வட கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர், லடாக், நம் கடலோரப் பகுதிகள், மலைப்பகுதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் இருக்க வேண்டும்.
*ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தேவையன பணிகள் நடந்து வருகின்றன. அப்பகுதியின் முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது. லடாக்கில் நவீன கட்டுமானங்கள் வரவிருக்கின்றன. அதோடு இண்டஸ் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.
*இன்று இந்திய கிராமங்களில் ஆப்டிக் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகள் சென்றடைந்து கொண்டிருக்கின்றன். கிராமபுறங்களிலும் டிஜிட்டல் தொழில் முனைவோர்கள் உருவாகி வருகிறார்கள்.
*எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் ரயில் இந்தியாவின் 70 வழித் தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
*ஒரு காலத்தில் செல்ஃபோன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது செல்ஃபோன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்திருக்கிறது.
*விரைவில் பிரதமர் கதிசக்தி தேசிய திட்டங்கள் தொடங்கப்படும். இது இந்தியாவை உருமாற்றும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் பிரதமர்.
*இந்தியாவில் எல்லா மூலை முடுக்குகளையும் 75 வந்தே பாரத் இரயில்கள் இணைக்கும்.
*பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் விருப்பங்கள் அவசியம். சிறந்த ஆளுகை இருந்தால்தான் நல்லாட்சியை வழங்க முடியும். அந்த வகையில் இந்தியா எழுதும் புதிய அத்தியாயத்துக்கு உலகம் சாட்சியாக உள்ளது.
*இந்திய அரசு நிர்வாகத்தின் புதிய அத்தியாயம் இது. எளிய மக்களின் வாழ்கையில் அரசின் தேவை இல்லாத தலையீடுகளைக் நீக்குவது அவசியம். அதன் அடிப்படையில் பல்வேறு தேவையில்லாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.
*இராணுவ பள்ளிகள் அனைத்தும் பெண்களுக்கு திறந்துவிடப்படும். கல்வி, விளையாட்டு, ஒலிம்பிக் என எல்லா துறைகளிலும் இந்தியாவின் பெண்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
*100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன், எரிசக்தித் துறையில் யாரையும் சாராத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நாம் உறுதி ஏற்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வு நாடாக வேண்டும் என்கிற நோக்கில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
*இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி ஹப்பாக மாற்ற வேண்டும். பசுமை எரிசக்தி, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்”