இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ எனும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின் 75-வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை (15 ஆகஸ்ட் 2021) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தில் நடந்த தேசியக் கொடியேற்றல் நிகழ்வில் துணைத்தூதுவர் அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரக கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார மைய கட்டடம் என்பன மூவர்ண மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.