சிறீலங்கா காவல்துறைக்கு ஸ்கொட்லாந்து வழங்கவிருந்த பயிற்சியானது, அதனைப் பெறவிருந்த காவல்துறை அணிகளின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான கரிசனைகள் காரணமாக, 2021 மே தொடக்கம் முதல் மீளாய்வுக்கு வந்துள்ள செய்திகளை, மனிதவுரிமைக் குழுக்களும் ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர் என ITJP தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது விசாரணையின் ஒரு வடிவமாக சித்திரவதைகளைப் பயன்படுத்தியதாக நீண்ட காலமாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வந்த இக்காவல்துறை அணிகளுக்குப் பயிற்சி வழங்குவது தொடர்பாக பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான கேள்விகளை இவ்வாண்டு எழுப்பியதைத் தொடர்ந்தே இம் முடிவு மீளாய்வுக்கு வந்துள்ளது என்றும் ITJP வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ITJP வெளியிட்ட முழு அறிக்கையின் வடிவத்தைக் காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்,