பாப்பரசரை சந்திப்பதற்காக பேராயர் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணம்

60 பேரடங்கிய குழு வத்திக்கான் பயணம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் 60 பேரடங்கிய குழு இன்று வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.

இவ்வாறு வத்திக்கான் புறப்பட்டுள்ள குழுவில் ஏப்-21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, போராயர் தலைமையிலான குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

Tamil News