அமெரிக்கா சென்றதாக கூறப்பட்ட பசில் ராஜபக்ச இலங்கையில்

பசில் ராஜபக்ச இலங்கையில்

தனி விமானம் ஒன்றில் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் அதற்கு மறுநாள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக தனியார் ஜெட் விமானம் ஒன்றில் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டததில் பசில் ராஜபக்ச பங்கேற்றிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகராக பசில் ராஜபக்ச உள்ளமை குறிப்பிடத்தக்கது.