கோட்டா அரசு உடன் பதவி விலக வேண்டும்-ரிஷாட்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் இனவாதத்தையும் மூலதனமாக வைத்து கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றீர்கள் எனத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், மக்களின் உணர்வுகளை மதித்து கோட்டா அரசு உடன் பதவி விலக வேண்டும்”  என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. இதனை வைத்து அரசியல் செய்யும் எவராக இருந்தாலும், அவர்களுக்கு இறைவன் ஒருபோதும் உதவி செய்யமாட்டான். அவர்கள் நிச்சயமாக தற்காலிக வெற்றிகளை அடைந்தாலும், அவர்களால் நிரந்தரமான எந்த வெற்றியையும் பெற முடியாது என்பது நிரூபணமாகி வருகின்றது.

குண்டுத் தாக்குதலுடன் எம்மை தொடர்புபடுத்தி, பெரும்பான்மை மக்களையும் எம்மையும் பிரிக்க நடவடிக்கை எடுத்தார்கள். பெரும்பான்மை மக்களை மடையர்களாக்கி ஆட்சிபீடம் ஏறினார்கள் என்ற உண்மையை, உலகம் இன்று அறிந்து வைத்துள்ளது என்றார்.

Tamil News