43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர்

இலங்கையில் ஏறத்தாழ 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு வில் நேற்றுசாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை அடிப்படைவாத கருத்துக்களை கொண்ட சர்வதேச முஸ்லிம் தலைவர்களோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உறவினர் ஒருவர், கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் சேவையாளர் ஒருவர் மற்றும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம் அமீன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்டனர் எனக் கூறப்படும் படம் ஒன்றையும் ஞானசார தேரர் ஆணைக்குழுவில் காட்சிப்படுத்தினார்.