சிறீலங்காவுக்கு சீனா மேலும் உதவிகள்

சிறீலங்காவில் உள்ள சீனா சபை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறீலங்காவுக்கு பெருமளவான கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.

308,600 முகக் கவசங்கள், 1,600 முகப் பாதுகாப்பு அங்கிகள், 2,400 கண் பாதுகாப்பு உபகரணங்கள், 400 உடல்பாதுகாப்பு அங்கிகள் ஆகியவற்றை பீஜிங்கை தளமாகக் கொண்ட சீனா மக்கள் சபை வழங்கியுள்ளது.

சீனா அரசு சிறீலங்கா அரசுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.