25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி -உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி

போரில் ரஷ்யாவின் 24,900 படை வீரர்கள், 1,110 பீரங்கிகளை அழித்துள்ளோம் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில்   உக்ரைன்   சேர்ந்தால், அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கருதிய  ரஷ்யா,  நேட்டோவில் சேரக் கூடாது என்று உக்ரைனை எச்சரித்து வந்தது. அதை உக்ரைன் ஏற்கவில்லை.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 24-ம் திகதி  உக்ரைன் மீது  ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் 73-வது நாளாக நீடிக்கின்றது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில்,

எங்கள் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்.

இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளனர். 1,110 பீரங்கிகள், 199 விமானங்களை அழித்துள்ளோம். மேலும் 155 உலங்குவானுார்திகள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்களை அழித்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் 1,900 வாகனங்கள், எரிபொருள் டேங்குகளையும் அழித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil News