முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மிக உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழவில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியினையும் செலுத்தப்பட்டிருந்தது. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினா படுகொலை செய்யப்பட மாணவிகளின் நினைவாக நினைவு பேருரையினை ஆற்றிய இருந்தார்.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை மேயர் சு.காண்டீபன், தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



