இந்தியா்: “2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்”  பிரதமர் மோடி

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா,  மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் எதிர்பார்த்தது போல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பலப்பரீட்சையைக் காட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து பாஜகவுக்கு நான்கு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கான கொண்டாட்டம் பாஜக தலைமையகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நான்கு வெற்றியும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்களின் உழைப்புக்குக் கிடைத்தவை. பாஜகவுக்கு இந்த வெற்றியைச் சாத்தியமாக்கி, ஜனநாயக திருவிழாவில் பங்கெடுத்த அனைத்து வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், “பாஜக உத்தராகண்டில் முதல்முறையாக ஒரே கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு மத்தியில் நாம் ஆட்சிக்கு வந்தபோது, 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் கிடைத்த வெற்றி அதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறினர். இப்போது அதே வல்லுநர்கள், 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் எனக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்,”  என்றார்.

Tamil News