மருந்து தட்டுப்பாட்டால் நோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருந்தாளர் சங்கம்

332 Views

நோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்

நோயாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்

தொற்று மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருந்து தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புற்று நோயாளர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் தலசீமியா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவரான அஜித் பீ.திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையின் அபாயங்கள் குறித்து சுகாதார அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்து அவர்கள் தலையிடக் கோரிய போதிலும், அரசாங்க திறைசேரி அனைத்து கொள்வனவுகளுக்கும் கடன் பத்திரங்களை வழங்குவதை நிறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போது அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்கத் தவறினால், இன்று நாம் காணும் டீசல் வரிசைகள் மற்றும் எரிவாயு வரிசைகளைப் போன்று அடுத்த இரண்டு வாரங்களில் மருந்துக்கான வரிசைகளை நாங்கள் காணலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tamil News

Leave a Reply