457 Views
கூட்டமைப்பை சந்திக்கிறார் கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Ra.Sampanthan) தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பானது எதிர்வரும் 15ஆம் திகதி அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ளதாக இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கூட்டமைக்கும் இடையிலான சந்திப்புக்குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில், அவை நடைபெறவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 15ம் திகதி தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூட்டமைப்பினரை சந்திக்க விரும்புவதாக ஜனாதிபதி செயலகம் கூட்டமைப்பின் தலைமைக்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.