பெற்றோல், டீசல் விலை சடுதியாக அதிகரிப்பால் விவசாயிகள் பாதிப்பு

விவசாயிகள் பாதிப்பு

திருகோணமலை – மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் பெரும்போக வேளாண்மை அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக டீசல் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக, இப்பிரதேசத்தில் அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஒரு மாதத்துக்கு முன்னர் மழையை நம்பிய நெற்செய்கை அறுவடையின் போது ஏக்கர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வழங்கிய நிலையில், தற்போது 9,000 ரூபாய் வழங்கி அறுவடை செய்வதால் அதிக நட்டத்தை எதிர்நோக்க நேரிடுவதாகவும் விளைச்சல் ஏக்கருக்கு 20 மூட்டைகளுக்கும் குறைவாகவே கிடைப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமன்றி வயல் உரிமையாளர்களிடமே டீசலை பெற்றுவருமாறும் அறுவடை உரிமையாளர்கள் தெரிவிப்பதால், தோப்பூர் பிரதேசத்திலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள மூதூர் மற்றும் சேருநுவர பிரதேசங்களுக்குச் சென்று  டீசல் பெறுவதற்காக சிரமப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று (11) நள்ளிரவு முதல் திடீரென பெற்றோல் 50 ரூபாவாலும்,டீசல் 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை லங்கா ஐஓசி அறிவித்துள்ள நிலையில் மேலும் பல கஷ்டங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

Tamil News