20 ஆவது திருத்தம் ஊழலுக்கு உகந்த சூழலை உருவாக்கும்; ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரநாஷனல்

அரசமைப்பு சீர்திருத்தம் அவசியமானது. ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊழலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் இலங்கை கிளை கவலையை வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை, ஊழல் விசாரணைகள், பொது நிதி கண்காணிப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தும் திறன் ஆகியவை இதில் முக்கியமானவை என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை 20 ஆவது திருத்தத்தின்கீழ் மாற்றப்படாது என்று கூறப்பட்டுள்ளபோதும் தகவல் அறியும் கட்டமைப்பிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசமைப்பு பேரவையால் நியமிக்கப்படுகின்ற நிலையில் 20 ஆவது திருத்தத்தில் அரசமைப்பு பேரவையை நீக்க வேண்டும் என்றுள்ளது.

எனினும் முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற பேரவைக்கு, அதன் வரையறுக்கப்பட்ட நோக்கம் மற்றும் அதிகாரங்களைக் கொண்டு பரிந்துரைகளைச் செய்ய முடியாது, இதனால் தகவல் அறியும் சட்டத் தின் செயற்பாடு ஆபத்துக்குள்ளாகும்.

முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் விதிகள், தேர்தல்களின் போது பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அல்லது நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்தைக் குறைக்கின்றன. முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகார வரம்பைக்கட்டுப்படுத்துகிறது, பொது சேவை தொடர்பான எந்தவொரு விடயத்திலும் ஆணைக்குழுவின் வழி காட்டுதல்களைத் தடுப்பதன் மூலம் தேர்தலில் முறை கேடுகளுக்கு வழியேற்படும்.

இந்தநிலையில் அரசமைப்பு சீர்திருத்தம் அவசியமானது. எனினும் இதன்மூலம் ஊழலுக்கு உகந்தசூழலை உருவாக்கத் தாம் எதிர்ப்பை வெளி யிடுவதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் குறிப் பிட்டுள்ளது.