பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்! - ஐபிசி தமிழ்

தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் தமிழீழ புரட்சிப்பாடல்களுக்கு உயிர் கொடுத்து பாடி ஈழ போராட்டத்திற்கு  ஆதரவழித்து வந்த  புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இன்று (27.04.2026) தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

புலியிசைப் பாடகர்: தேனிசை செல்லப்பாவின் வாழ்க்கை மற்றும் இசை

துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்த நிலையில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வஞ்சுவாஞ்சேரி படப்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.