20 ஆவது திருத்தத்துக்கு எதிராகஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மனு

இலங்கையின் அரசியலமைப்புக்கான 20 ஆம் திருத்தச்சட்ட மூல வரைவிற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

20 ம் திருத்தச்சட்ட மூல வரைவிற்கு எதிராக நாளை திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில குறைப்பாடுகள் உள்ளதால் புதிய அரசியலமைப்பில் திருத்தம் ஏற்படப்போவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுபான்மையினருக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் தொடர்பில்; இதுவரை எந்தவொரு கலந்துறையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலத்தினை முழுமையாக எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.