லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஐ.நா.வுக்கான அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, உயிர்பிழைத்த 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன. சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.