இலங்கை வர முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்

378 Views

16100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்


மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இலங்கை செல்ல பயணிகள் விமானம் தயாராக இருந்த போது அதில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டுள்ளனர். இதன் போது இலங்கை வழியாக துபாய் செல்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 16 மீனவா்கள்  ஒவ்வொருவரும் தலா ஆயிரம் அமெரிக்க டொலா் வைத்திருந்ததாக கூறி, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க டொலா் கொண்டு சென்றதற்காக வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்த அமெரிக்க டொலா் 16,100 பறிமுதல் செய்ததாக கூறப்படுகின்றது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply