இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா


இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 513,609 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம்   மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு   தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply